வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகம் 1980 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் வீரமுனை பிரதேசத்தில் பல விளையாட்டு போட்டிகளை நடாத்தியும், விளையாட்டை முன்னேற்றுவற்காகவும் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது. இதற்கமைய ஒவ்வொரு வருடமும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கலை, கலாசார விளையாட்டு நிகழ்வுகளை விநாயகர் விளையாட்டுக் கழகம் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதன்படி கழகத்தின் 31வது ஆண்டு நிறைவினை ஒட்டியும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டும் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் விளையாட்டுப் போட்டி நேற்று (17.04.2011) வீரமுனை இராமகிஷ்ண மிஷன் பாடசாலை மைதானத்தில் கழகத் தலைவர் ஜோ.செந்தில்நாதன் தலமையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இவ் விளையாட்டு நிகழ்வின் முதலாவது அங்கமான மரதன் ஓட்டப் போட்டி நேற்று காலை 7.30 மணியளவில் வீரமுனை இராமகிஷ்ண மிஷன் பாடசாலை சந்தியில் ஆரம்பித்து மல்வத்தை வரை சென்றடைந்து மீண்டும் ஆரம்பிப்பு இடத்தை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து பி.ப 2.00 மணியளவில் இராமகிஷ்ண மிஷன் பாடசாலை மைதானத்தில் பல பாரம்பரிய, கலாசார விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது. இவ் விளையாட்டுப் போட்டிக்கு பிரதம அதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் A.மன்சூர் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தஹாநாயக்க போன்றோர் கலந்து சிறப்பித்தனர். அதிதிகளை வரவேற்றல், கொடியேற்றல், இறைவணக்கம், மங்கள விளக்கேற்றல், ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து த.லோகிதாசன் வரவேற்புரையை நிகழ்த்த, விநாயகர் விளையாட்டுக் கழக தலைவர் ஜோ.செந்தில்நாதன் தலைமை உரை நிகழ்த்தினார் இதனைத் தொடர்ந்து பல பாரம்பரிய, கலாசார விளையாட்டு நிகழ்வுகள் சிறப்புற நடந்தது. வீரமுனைப் பிரதேசத்தின் அதிகமான மக்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. |
நிகழ்வுகள் >