கிழக்கு மாகாண சபை நடாத்தும் கிழக்கு மாகாண விளையாட்டு விழா -2010 இன்று சனிக்கிழமை மட்டக்களக்கில் வெகு விமர்சையாக ஆரம்பமானது.இன்று சனிக்கிழமை காலை 10.00மணியளவில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் கல்வி ,தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் ஆரம்பமானது.கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து நூற்றுக்கணக்காண தமிழ்,சிங்கள,முஸ்லிம் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி,கலாசார,ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க,வீதி அபிவிருத்தி,வீடமைப்பு,நீர்வினியோக அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, விவசாய,விலங்கு,மீன்பிடித்துறை அமைச்சர் ரி.நவரெட்னராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி சரத்தென்னக்கோன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இரு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த விளையாட்டு விழாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெறவுள்ள இறுதி நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜயவீர மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர். தகவல்:வாலசிங்கம் கிருஷ்ணகுமார் (நிருபர்) |
நிகழ்வுகள் >