சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு விழா

posted Oct 6, 2012, 12:07 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 8, 2012, 6:47 PM ]
இந்து ஸ்வயம்சேவக சங்கம் ஏற்பாட்டில் சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு விழா இன்று (06/10/2012) கமு/ சது/ வீரமுனை இராம கிருஸ்ண மகா வித்தியாலய சுவாமி விவேகானந்தர் அரங்கில் இடம்பெற்றது. அதனை முன்னிட்டு காலை 8.00 மணியளவில் வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் எழுச்சி ஊர்வலமொன்று இடம்பெற்றதுடன் சுவாமி விவேகானந்தர் அரங்கில் மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், சுவாமி விவேகானந்தரின் படத்திற்கு மலர் தூவுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை, ஆசியுரை இடம்பெற்றதுடன் வீரமுனை திருஞான சம்பந்தர் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்சிகள் மற்றும் சொற்பொழிவுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் k.குணநாயகம். முன்னாள் அறநெறி பாடசாலை அதிபர் S.ரகுபதி, ஆலய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.                    Photos by: Krishanapillai Sutharsan