தமிழ் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் விளையாட்டுப் போட்டி நேற்று (15.04.2012) இடம்பெற்றது .விளையாட்டுப் போடியின் முதலாவது அங்கமான மரதன் ஓட்டப் போட்டியானது காலை 7.00 மணியளவில் வீரமுனை ஆர் . கே . எம் பாடசாலை சந்தியிலிருந்து மல்வத்தை வரை இடம்பெற்றது. இதனை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் A. M.M நௌஷாட்,ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பி.ப 2.30 மணியளவில் வீரமுனை ஆர் . கே . எம் பாடசாலை மைதானத்தில் பல்வேறு கலாசார, பண்பாட்டு, கிராமிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ .திரு . s. புஷ்பராஜா, கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் A. M.M நௌஷாட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் கௌரவ திரு. A.மன்சூர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு S.L சம்சுதீன் மற்றும் விஷேட அத்திகளாக வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பிரதம குரு கு .நிர்மலேஸ்வரக் குருக்கள், வீரமுனை ஆர்.கே.எம் பாடசாலை அதிபர் திரு . S. சந்திரமோகன் மற்றும் சம்மாந்துறை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி M.I அமீர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் V.தியாகராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். கழக தலைவர் M. உதயராஜனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது அதிதிகளை வரவேற்றல் , கொடியேற்றல், மங்கள விளக்கேற்றல், இறை வணக்கத்துடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. அந்தவகையில் சிறுவர்களுக்கான ஆமை ஓட்டம், பாடசாலை செல்லல் , பலூன் உடைத்தல் , தடை தண்டி ஓட்டம் , முட்டி உடைத்தல் தலையனைச் சமர் , மா ஊதி காசு எடுத்தல் ,சமநிலை ஓட்டம் , மெதுவான சைக்கிள் ஓட்டம் , கை கட்டி பணிஸ் உண்ணல் , கயிறு இழுத்தல் ,100M ஓட்டம் ,வினோத உடைப்போட்டி , சங்கீதக் கதிரை , சறுக்கு மரம் ஏறுதல் , முட்டை எறிந்து பிடித்தல் , ரஸ்க் சாப்பிடுதல் சித்திரைப் பாப்பா போன்ற பல சுவாரசியமான பண்பாட்டை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றது . இதேவேளை மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் காயத்திரி மற்றும் எவரெஸ்ட் அணிகள் மோதின இதில் எவரஸ்ட் அணி சம்பியன் பட்டம் வென்றது .இந் நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. |
நிகழ்வுகள் >