இராம கிருஷ்ண மிஷன் பாடசாலை மாணவர்களின் ஆசிரியர் தின நிகழ்வுகள்

posted Oct 6, 2010, 4:15 AM by Unknown user   [ updated Oct 6, 2010, 4:39 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலை மாணவர்கள் இன்று(02/10/2010) ஆசிரியர் தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடினர்.ஒவ்வொரு வகுப்பாக சென்ற ஆசிரியர்களை மாணவர்கள் வரவேற்று மாலை அணிவித்து பரிசில்களை வழங்கியதொடு அவர்களது ஆசிர்வாதத்தையும் பெற்றனர். அதன் பின் ஒன்று கூடல் மண்டபத்தில் பாராட்டு நிகழ்வொன்றும் இடம்பெற்றது. இதில் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களும், 130 இற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டதோடு பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் மேற்படி மாணவர்களுக்கு கல்வி பயிற்றிய ஆசிரியர் சசிகரன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.அதனை தொடர்ந்து தவணைப்பரிட்சையில் முதல் முன்று இடங்கள் வந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.