மண்டூர் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு, வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பக்தர்கள் காவடியெடுத்தல், அலகேற்றுதல் போன்ற நேர்த்தியினை நிறைவேற்றும் முகமாக நேற்று (29.08.2011) பி.ப 3.00 மணியளவில் மண்டூர் ஆலயத்தை நோக்கி புறப்பட்டனர். பகத்தர்கள் புறப்படும் நேரத்தில் மிகக் கடுமையான மழை பெய்த போதும் அதனை பொருட்படுத்தாமல் நடைபாதையாக மிகுந்த பக்தியுடன் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். |
நிகழ்வுகள் >