திவிநெகும (வாழ்வின் எழுச்சி) தேசிய வேலைத் திட்டத்தின் ஆறாம் கட்டம் இன்று 20 ஆம் திகதி சுபநேரமான காலை 10.07 மணிக்கு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் ஆரம்பமாகியது. ‘வளம் நிறைந்த இல்லம் சுபீட்சமான தாய்நாடு’ என்ற தொனிப்பொருளிலான இவ்வேலைத் திட்டத்தின் ஊடாக குடும்பங்களினது பொருளாதாரத்தையும், பொஷாக்கு மட்டத்தையும் மேம்படுத்தி 25 இலட்சம் குடும்பங்களை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பொருளாதார அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் இவ்வேலைத் திட்டம் நாட்டிலுள்ள 331 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 14022 கிராம சேவகர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் குடும்பங்களுக்கு 7 வகைகளை உள்ளடக்கிய மரக்கறி விதைப் பொதிகளும், நான்கு வகைகளை உள்ளடக்கிய 9 வகையான மரக்கறி கன்றுகள் என்பவற்றுடன் பச்சை மிளகாய், தக்காளி, கறி மிளகாய், பழ வகைகள், தென்னம் பிள்ளைகள், மருந்து செடிகள், அகத்தி உள்ளிட்ட பலவித கன்றுகளை விநியோகிக்கப்பட்டன. இதனை முன்னிட்டு திவிநெகும உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவகர் ஆகியோரின் தலைமையில் வீரமுனையிலுள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் மூன்று வெவ்வேறு இடங்களில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டது. |
நிகழ்வுகள் >