வீரமுனை நற்பணி மன்றமானது எமது கிராமத்தில் பல்வேறு சேவைகளைச் செய்துவருகின்றது. இதற்கமைய இம் முறை க.பொ.த சாதாரண பரீட்சை எழுதுகின்ற மாணவர்களின் நன்மை கருதி வீரமுனை நற்பணி மன்றத்தால் கணித பாட விஷேட வகுப்புக்கள் இன்று (30.04.2011) காலை 11 மணியளவில் வீரமுனை I.S.A கல்வி நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மன்றத்தின் தலைவர் க.கருணாகரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. |
நிகழ்வுகள் >