உலக சுற்றாடல் தின நிகழ்வுகள்

posted Jun 6, 2013, 9:55 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jun 6, 2013, 9:57 AM ]
1972 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற மனித சுற்றாடல் மாநாட்டின் போது எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தின்படி ஒவ்வொரு வருடமும் ஜுன் 5ஆம் திகதி உலக சுற்றாடல் தினம் என பிரகடனப்படுத்தப்பட்டது.சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஒவ்வாரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலை மாணவர்களினால் சிரமதானம், மர நடுகை மற்றும் டெங்கு நோய்க்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் என்பன இடம்பெற்றதுடன் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் மர நடுகையும் இடம்பெற்றது.


Comments