அசத்தல், சூப்பர் கிங்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி

posted Oct 27, 2011, 8:57 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Oct 27, 2011, 9:04 AM ]
தீபாவளியை முன்னிட்டு வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் அணுசரனையுடன் செல்வி அணியினர் நடாத்தும் மென் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த 20 ஆம் திகதி முதல் ஆரம்பமானது . இதில் விநாயகர் விளையாட்டு கழகத்தை சேர்ந்த 08 அணிகள் பங்குபற்றின.தொடரின் அரையிறுதி போட்டி இன்று பி .ப 2.30 மணியளவில் வீரமுனை ஆர் .கே . எம் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது . முதலாவது அரையிறுதி போட்டியில் சூப்பர் கிங்ஸ் மற்றும் செல்வி அணியினர் மோதின. இதில் சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதே வேளை இரண்டாவது அரையிறுதி போட்டியில் காயத்திரி அணியை எதிர்கொண்ட அசத்தல் அணி 3  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் கிங்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி    பெற்றது. இறுதிப் போட்டிக்தில்  நாளை பி .ப 2.30 மணியளவில் இடம்பெறும்.