அமரர் காசுபதி ஞாபகார்த்தக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி

posted Sep 15, 2010, 5:01 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jan 21, 2011, 3:04 AM by Sathiyaraj Thambiaiyah ]
அமரர் காசுபதியின் நினைவாக வீரமுனை இணையத்தள குழுவின்(Web Team) அனுசரணையில் அசத்தல் அணியினால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி எதிர் வரும் (18.09.2010) அன்று சனிக்கிழமை காலை 08.30 மணியளவில் வீரமுனை ஆர்.கே.எம் பாடசாலை மைதானத்தில் சுப்பர்கிங்ஸ் அணியினர் மற்றும் காயத்திரி அணிகளுக்கிடையில் இடம் பெறவிருக்கின்றது. இச் சுற்றுப் போட்டியில் மிலேனியம், காயத்திரி, அசத்தல், சுப்பர் கிங்ஸ், லக்கி, லெவன் ஸ்டார் ஆகிய ஆறு அணிகள் பங்கு பற்றின. இதில் அசத்தல், சுப்பர் கிங்ஸ், லக்கி, காயத்திரி ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகின. முதலாவது அரையிறுதி போட்டியில்  காயத்திரி மற்றும் லக்கி அணியினர் மோதினர் இதில் காயத்திரி அணியினர் 18 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகினர். சுப்பர் கிங்ஸ் மற்றும் அசத்தல் அணியினருக்குமான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சுப்பர் கிங்ஸ் அணியினர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


 இப் போட்டியானது மிகவும் சுவாரசியமாக அமையும் என்பது ரசிகர்களின் கருத்தாக காணப்படுகின்றது. ஏனெனில் இரண்டு அணியிலும் சிறந்த பந்து வீச்சாளர்களும் துடுப்பாட்ட வீரர்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments