அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைப்பு

posted Feb 15, 2015, 11:54 PM by Veeramunai Com   [ updated Feb 17, 2015, 8:55 AM by Sathiyaraj Thambiaiyah ]
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் அவர்களினால் வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மற்றும் வீரச்சோலை அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (15/02/2015) அறநெறி பாடசாலையின் ஆலோசகரும், ஆசிரிய ஆலோசகருமாக எஸ்.ரகுபதி தலைமையில் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தின் பிரதம குரு ரவிக்குருஜீ, கலையரசனின் பிரத்தியேக செயலாளர் பா.புவிராஜ் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் அறநெறி பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.