ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வு

posted Oct 29, 2014, 8:43 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 29, 2014, 8:49 PM ]
ஆறுமுகனுக்குரிய விரதத்தின் முக்கியமானதாக சொல்லப்படும் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வு நேற்று (29.10.2014) உலகம் எங்கும் உள்ள முருகன் ஆலயங்களிலும் ஏனைய சில ஆலயத்திலும் கொண்டாடப்பட்டது. "கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும்" என்பது ஆன்றோர் வாக்கு அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.

இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழ மொழியாக கூறுவார்கள். இதனைத்தான் முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவ ரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடுவதுடன் நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.

கந்தசஸ்டி விரதத்தின் சூர சம்ஹார நிகழ்வு நேற்று மாலை 05.00 மணியளவில் வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.