சது/ வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலை அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம் கடந்த 16.03.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு பாடசாலை அதிபர் திரு.எஸ்.ரகுநாதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை மேம்பாட்டு திட்ட இணைப்பாளர் திரு.வி.ரி.சகாதேவராஜா (உதவிக்கல்விப் பணிப்பாளர்), பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க நிருவாக சபையினர், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர். இதன்போது பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் கடந்த கால செயற்பாடுகள் பற்றி எடுத்து கூறப்பட்டதோடு புதிய நிருவாகசபை தெரிவும் இடம்பெற்றது. |
நிகழ்வுகள் >