அம்பாரை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக இங்கினியாகலையில் அமைந்துள்ள சேனாநாயக்க குளத்தின் நீர் மட்டம் அதிகரித்தமையால் அதன் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டன. இதன் காரணமாக வீரமுனை, வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, மல்வத்தை மற்றும் சொறிக்கல்முனை போன்ற கிராமங்களின் தாழ்நிலப் பகுதிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கரையோரப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். |
நிகழ்வுகள் >