![]() அம்பாறை மாவட்டத்தில் வழக்கமாக ஒவ்வொரு போகத்திலும் ஒரு லட்சத்து 56 ஆயிரம் ஏக்கர் நெற்காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதிலும் இம்மாவட்ட நெற்செய்கையின் நீர்ப்பாசனத்திற்கான சேனநாயக்க சமுத்திரத்தில் போதிய நீரின்மையால் இம்முறை சிறுபோக நெற்செய்கை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் சிறுபோக நெற்செய்கையில் விவசாயிகள் திருப்திகொள்ளும் வகையிலான நெல்விளைச்சல் கிடைத்துள்ளதாகத் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கசின்றனர். இதேவேளை ஓர் ஏக்கரில் 35-40 மூடைகள் வரை நெல்விளைச்சல் கிடைத்துவருவதாகவும் உத்தரவாதவிலையில் நெல் விற்பனை செய்வதிலுள்ள சிரமங்கள், தாமதங்கள் காரணமாக, தனியார் வியாபாரிகளின் தில்லுமுல்லுகள் மற்றும் மோடிசடிகளில் சிக்க வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். முன்னர் அறுவடைக் காலம் வந்தால் (அருவி வெட்டுதல்) குதூகல வருமானத்துடன் திகழ்ந்த பாமர ஏழை அறுவடைத் தொழிலாளர்கள், அறுவடை இயந்திரங்களின் பாவனை காரணமாக தொழிலின்றி முடங்கிக் கிடக்கும் பேரவலமும் நீடிக்கின்றது. எனினும் அறுவடை இயந்திரங்களைச் செலுத்த முடியாத சதுப்புக் காணிகளில் அறுவடைத் தொழிலாளர்களைக் கொண்டே அறுவடை செய்யும் நிலைமையும் உள்ளது. ![]() ![]() |
நிகழ்வுகள் >