ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய சித்திரை புத்தாண்டு விசேட பூசை நிகழ்வுகள்

posted Apr 14, 2015, 10:43 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Apr 14, 2015, 11:00 AM ]
தமிழ் சிங்கள புத்தாண்டான சித்திரை மன்மத வருடப்பிறப்பை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (14.04.2015) ஆலய பிரதம குரு சிவஶ்ரீ.கு.நிர்மலேஸ்வரக் குருக்களின் தலைமையில் அபிஷேக அலங்காரப் பூசைகள், கைவிசேடம் வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றன. இந்த நிகழ்வில் வீரமுனை பிரதேசத்தினை சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டதோடு வீரமுனையிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் தைப்பொங்கல் வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.