தொடர் மழையால் அறுபடை பாதிப்பு

posted Feb 16, 2012, 8:47 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 16, 2012, 8:49 AM ]
தற்பொழுது நிலவி வரும் அசாதாரண  காலநிலை காரணமாக வேளாண்மை அறுபடை வெகுவாக பதிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களாக பெய்து வருகின்ற தொடர் மழையால் வேளாண்மை அறுபடை செய்வதில் விவசாயிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். மேலும் நெல்லின் சந்தை விலையிலும்  குறைவு ஏற்பட்டுள்ளமையால்  விவசாயிகளை கவலை கொள்ளச் செய்துள்ளது.