மாட்டு கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேட்டை எதிர்கொள்ளும் மக்கள்

posted Apr 5, 2013, 7:14 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Apr 5, 2013, 7:37 PM ]
வீமுனைப்பகுதியில் மாடு வெட்டப்படும் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகிவருவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்து மக்களை முழுமையாக கொண்ட வீரமுனைப்பகுதியில் தினமும் இவ்வாறான கழிவுப்பொருட்கள் கொட்டப்படுவதால் பல்வேறு சுகாதார சீர் கேடுகள் ஏற்படுகின்றது. மாட்டு கழிவுகள் இப்பகுதியில் கொட்டப்படுவதால் அவற்றினை மிருகங்கள் கொண்டு சென்று வீடுகளில் போடுவதுடன் காகங்கள் அவற்றைக்கொண்டு சென்று கிணறுகளில் போடுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பல்வேறு தரப்பினருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை தொடர்பில் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.