அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனையில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுவருகின்றன.சம்மாந்துறை பிரதேச செயலகம் ஊடாக இந்த நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன்கீழ் நேற்று வெள்ளிக்கிழமை (02.01.2014) ஒரு தொகுதி பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் பிரதேச கிராம உத்தியோகத்தர் கே.பிரகாஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.தயாபாரன் ஆகியோரால் வழங்கிவைக்கப்பட்டன. கடந்த வெள்ளத்தினால் வீரமுனைப்பிரதேசத்தின் தாழ்நிலப்பகுதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது. |
நிகழ்வுகள் >