கடந்த சில நாட்களாக இலங்கையின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக மழை பொழிந்து வருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக மழை பொழிந்து வருவதனால் இம்மாகாணத்தில் வாழ்கின்ற பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வீரமுனையிலுள்ள தாழ்நிலங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதனால் பலர் உறவினர் வீடுகளுக்குள் இடம்பெயர்ந்து தஞ்சமைடந்துள்ளனர். இதுவரை 65 குடும்பங்களைச் சேர்ந்த 270 பேருக்கு அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் மேலும் இவ் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என பிரதேச கிராமசேவகர் கூறினார். |
நிகழ்வுகள் >