வீரமுனைப் பிரதேசத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு

posted Jan 9, 2011, 5:09 AM by Ponnampalam Thusanth   [ updated Jan 10, 2011, 6:39 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனை பிரதேசத்தில் கடந்த இரண்டு தசாப்தத்தில் ஏற்படாத பாரிய வெள்ளப்பெருக்கு இம் முறை ஏற்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியிலிருந்து பெய்துவரும் அடைமழை காரணமாகவும் நேற்றிரவு முழுவதும் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாகவும் வீரமுனையின் அநேகமான பகுதிகள் மற்றும் வயல் நிலங்கள் மிகவும் மோசமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளநீர் உட்புகுந்ததன் காரணமாக அநேகமான மக்கள் வீரமுனை சது இராமக்கிருஷண மகா வித்தியாலயத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வீரமுனை கிராம உத்தியோகத்தர்கள் , சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் லியாகத் அலி , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புஸ்பராசா மற்றும் அம்பாறை மாவட்ட சுதந்திர கட்சி இணைப்பாளர் நௌஷாட் ஆகியோர் வந்து நேரில் பார்வையிட்டனர். 
இடம் பெயர்தோர்க்கு பிரதேச செயலகத்தினால் மதிய போசனத்திற்காக கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக எமது இணையக்குகுழுவின் உதவியுடன் பாண் வழங்கப்பட்டதுடன் மேலும் நிவாரணங்களை பெற்றுத்தர கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.