வீரமுனை ஆர்.கே.எம் பாடசாலையில் தரம் பத்தில் கல்வி கற்கும் வீரச்சோலையைச் சேர்ந்த செல்வராஜா சிந்துஜா என்னும் மாணவி திருகோணமலையில் இடம் பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தலில் 2ம் இடத்தைப் பெற்று அகில இலங்கை ரீதியாக இடம் பெறும் போட்டிக்கு தெரிவாகியுள்ளார். வீரமுனை ஆர்.கே.எம் பாடசாலை வரலாற்றில் முதற் தடவையாக ஒரு மாணவி அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எமது இணையத்தள குழுவின் சார்பாகவும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். |
நிகழ்வுகள் >