வீரமுனை இராம கிஷ்ன மிஷன் பாடசாலையில்
2012 ஆம் ஆண்டின் இல்லங்களுக்கிடையான விளையாட்டுப் போட்டி நாளை (27.02.2012)
பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது. முதலாம் கட்ட போட்டிகள் நாளை மற்றும் நாளை மறு தினம் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அதிபர் ,ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ் விளையாட்டுப் போட்டியானது இம் மாத ஆரம்பத்தில் இடம்பெறுவதாக இருந்தது ஆனால் மழையுடன் கூடிய காலநிலையால் மைதானத்தில் நீர் தேங்கி நின்றதனால் பிற்போடப்பட்டது. வள்ளுவர், இளங்கோ, கம்பர் என்ற இல்ல பிரிப்பின் அடிப்படையில் மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. |
நிகழ்வுகள் >