இன்று சர்வதேச சிறுவர் தினம் ஆகும். உலகளாவிய ரீதியில் 1979 முதல் ஒக்டோபர் மாதம் 1ம் திகதி சர்வதேச சிறுவர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டது. இன்றைய கால கட்டத்தில் பெரிதளவு சிறுவர் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை இதனால் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரித்து வருகின்றது. பாலியல் ரீதியான சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள், சிறுவர் வேலைக்கமர்த்தல் நடவடிக்கைகள், சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்தல், சிறுவர் போராளிகள் என இன்றைய உலகில் பல் வேறு வழிகளிலும் சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திவருகின்றனர்.
சிறுவர்களின் உணர்வுகளை மதிக்காதவர்கள் இன்று பல் வேறு வழிகளிலும் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திவருகின்றனர். இதனால் சிறுவர்கள் பல் வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். சிறுவர்களுக்குரிய உணர்வுகள், எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கை துளிர்விடும் சிந்தனைகள், சந்தோசங்கள் என்பவை அவர்களிடமிருந்து மழுங்கடிக்கப்படுவதனால் சிறுவர்கள் உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிக்கப்பட்டு நாளைகள் மீது ஒரு நம்பிக்கை இல்லாத விரக்தியுடனே அவர்கள் வாழ்ந்து வருவதும் நாளை பெரும் அபாயத்தை ஏற்படுத்திவிடும் அப்படி வளரும் குழந்தைகள் தமக்கு மட்டும் இன்றி சமுதாயத்திற்கும் ஆபத்தாகும் சந்தர்ப்பங்களும் உண்டு.
சரியான வழிகாட்டல் இன்மையாலும் போதிய பாதுகாப்பு இன்மையாலும் சிறுவர்கள் தங்களது உரிமைகளை இழந்து துன்பப்படுகின்றனர். சிறுவர்கள் உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் தங்களை தனித்து வழி நடாத்தி செல்ல முடியாதவர்களாக காணப்படுகின்றனர்.; சிறுவர்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்துவோர் தாமும் அவ்வாறான நிலையில் இருந்து வந்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே ஒவ்வொருவரும் இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்று உணர்ந்து நடக்கும் பட்சத்தில் மாத்திரம் தான் சிறுவர்களை காப்பாற்ற முடியும்.
|
நிகழ்வுகள் >