இறுதிப் போட்டி

posted Nov 8, 2011, 10:25 AM by Sathiyaraj Kathiramalai
தீபாவளியை முன்னிட்டு வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் அணுசரனையுடன் செல்வி அணியினர் நடாத்திய மென் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின்   இறுதிப் போட்டி கடந்த 28.10.2011 ஆம் திகதி  இடம்பெறவிருந்ததது. ஆனால் கடும் மழை காரணமாக மைதான ஈரலிப்பினால் தடைப்பட்டது . தற்போது நிலவும் சீரான காலநிலை மற்றும் மைதான ஈரலிப்பின்மையால்  இப் போட்டி நாளை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது .  அசத்தல், சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றிந்தமை குறிப்பிடத்தக்கது .