கந்தசஷ்டி விரத முடிவு

posted Nov 12, 2010, 4:34 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Nov 14, 2010, 5:26 AM by Sathiyaraj Thambiaiyah ]
முருகனை நினைத்து அனுட்டிக்கும் முக்கிய விரதங்களில் ஒன்று கந்தசஷ்டி விரதமும் ஒன்றாகும். இவ் வருடம் கந்தசஷ்டி விரதம் ( 6.11.2010) முதல் (11.11.2010) வரை அனுட்டிக்கப்பட்டது.

 



வழமை போன்று இம்முறையும் வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலே நூற்றுக்கணக்கான அடியார்கள் விரதம் அனுட்டித்தனர். விரதத்தின் இறுதி நாளான நேற்று (11.11.2010) மாலை 5 மணியளவில் சூரசம்காரம் இடம்பெற்றதோடு அன்று இரவு உபவாசம் இருந்து விழித்திருந்த அடியார்களுக்காக வீரமுனை அசத்தல் அணியிணரால் பக்தி திரைப்படமும் காண்பிக்கப்பட்டது. அத்துடன் காலை 9 மணியளவில் அன்னதான வைபமும் இடம்பெற்றது.