வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்

posted Mar 21, 2011, 7:28 AM by Unknown user   [ updated Mar 22, 2011, 6:35 AM by Sathiyaraj Thambiaiyah ]

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நேற்று (20.03.2011) காலை 10 மணியளவில் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதன்போது கடந்த கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதோடு புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது. புதிய நிர்வாக சபையாக அ.பிரதீபன்> ப.ரசிகரன்> நா.கோவிந்தசாமி> சி.சிவசங்கர் ஆகியோர் சபையோரால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர். மேலும் 13 பேர் கொண்ட நம்பிக்கையாளர் சபை ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது. இவ் நம்பிக்கையாளர் சபையை விடுத்து எவ்விதமான தீர்மானங்களையும் நிர்வாக சபை எடுக்க முடியாது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.