அமரர் காசுபதி ஞாபகார்த்தக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள்

posted Sep 18, 2010, 12:31 AM by Unknown user   [ updated Sep 18, 2010, 1:17 AM by Sathiyaraj Thambiaiyah ]
அமரர் காசுபதி ஞாபகார்த்தக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று காலை 08.30 மணியளவில் வீரமுனை R.K.M வித்தியாலயத்தில் ஆரம்பமானது. இதில் சூப்பர் கிங்ஸ் மற்றும் காயத்திரி அணிகள் மோதினர். நாணய சுழற்சியில் வெற்றி ஈட்டிய சூப்பர் கிங்ஸ் அணியினரின் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். இதன் படி களம் இறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்து செல்ல பின்வரிசை துட்டுப்பட்டாத்தின் முலம் 15 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டும் வீழ்த்தப்பட்ட நிலையில் 108 ஓட்டங்களை பெற்றனர். 109 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய காயத்திரி அணியினர் 13 வது ஓவரில் 109 என்ற வெற்றியிலக்கை அடைந்தனர். இதில் சிறப்பாக துட்டுப்பெடுத்தாடிய லோஜன் ஆட்டம் இழக்காமல் 70 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.தொடராட்ட நாயகன்(Man of the Series) விருதினை அசத்தல் அணியினை சேர்ந்த சுகிர்தன் கிராம நிலதாரி திரு .உதயராஜன் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

ஆட்ட நாயகன்(Man of the Match) விருதினை காயத்திரி அணியினை சேர்ந்த சிவலோஜன் கிராம நிலதாரி திரு.புவனராஜ் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

வெற்றிக்கிண்ணத்தினை திருமதி. காசுபதி அவர்கள் வழங்கி வைக்க காயத்திரி அணியின் தலைவர் டிசாந்தன் பெற்றுக்கொண்டார்.