வீரமுனை பிரதேசத்தில் சிவலிங்க தரிசனம்

posted Mar 7, 2013, 9:08 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Mar 7, 2013, 9:09 AM ]
சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் நிலையம்  நடாத்தும்  பாரதத்தின் பெருமைமிக்க ஜோதிர்லிங்க தரிசனம் இன்று  வியாழக்கிழமை அம்பாறை மாவட்டத்தில்  இடம்பெற்றது. இன்று பி .ப  01 மணியளவில்  வீரமுனை பிரதேசத்தில் லிங்க தரிசனம் இடம்பெற்றது . இதில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 12 சிவலிங்கங்களில் 06 சிவலிங்கங்கள்  தரிசனம் அம்பாறை, மட்டக்களப்பு மாவடத்தில் இடம்பெற்று  இறுதியாக சிவராத்திரி தினத்தன்று  12 சிவலிங்கங்களின் சிறப்பு தரிசனம் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது .