மல்வத்தை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் வீரமுனை விஷ்னு அணியினர் வெற்றி

posted Apr 13, 2015, 10:34 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Apr 13, 2015, 10:39 AM ]
சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு மல்வத்தை சூப்பர் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டிகடந்த மாதம் ஆரம்பமானது. பத்து அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப் போட்டியில் இறுதி சுற்றுக்கு வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகம் சார்பாக விளையாடிய விஷ்னு அணியும் மல்வத்தை சூப்பர் ஹீரோஸ் அணியும் தெரிவாகின. இன்று (13.04.2015) இடம்பெற்ற இறுதிச் சுற்றுப்போட்டியில் விஷ்னு அணியினர் வெற்றிவாகை சூடினர். இதில் தொடர் ஆட்ட நாயகன் மற்றும் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதுகளை வீரமுனையை சேர்ந்த வி.சிவலோஜன் பெற்றுக்கொண்டார். தொடர் ஆட்ட நாயகன் மற்றும் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் வி.சிவலோஜன்

மல்வத்தை சூப்பர் ஹீரோஸ் அணியினர்

 வெற்றிவாகை சூடிய விஷ்னு அணியினர்