மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான நிவாரண உதவிகோரல்

posted Oct 29, 2014, 8:52 PM by Sathiyaraj Thambiaiyah
பதுளை மீரியபெத்தையில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காரைதீவு மனித அபிவிருத்தி ஸ்தாபனத்துடன் காரைதீவை சேர்ந்த பல சமூகசேவை அமைப்புக்களுடன் இணைந்து மனிதாபிமான நிவாரண பொருட்களை காரைதீவு பிரதேசத்தில் சேகரிக்கவுள்ளனர்.

எனவே தங்களால் இயன்ற உதவிகளை சனிக்கிழமை (01.11.2014) பொருட்களை சேகரிக்கவருபவர்களிடம் கொடுத்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வோம்.

குறிப்பு-தங்கள் பொருட்களை காரைதீவு மனித அபிவிருத்தி ஸ்தாபன அலுவலகத்திலோ அல்லது அவர்களை தொடர்பு கொண்டோ karaitivu.org இணையக்குழுவினரை தொடர்பு கொண்டோ பொருட்களை கையளிக்கலாம்.
-நிவாரணக்குழு-


                            தொடர்புகளுக்கு-0773015350(இணைப்பாளர்,HDO)
                                                    0758988942(Karaitivu.org)
Comments