பொலீஸ் நடமாடும் சேவை

posted Aug 30, 2013, 9:44 AM by Veeramunai Com   [ updated Aug 30, 2013, 9:45 AM ]
வீரமுனையில் இன்று (30.08.2013) பொலீஸ் நடமாடும் சேவையொன்று கமு/சது/ வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இந்நடமாடும் சேவையில் சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர்  லத்திப், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பத்மஸ்ரீ, உதவி  மேலதிக மாவட்ட பதிவாளர் சத்தார் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இதன் போது மாணவர்களது விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்  பிறப்பு சான்றிதழ், மற்றும் பொலிஸ் முறைப்பாட்டுப்பிரதிகள், தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தல் போன்ற பல் வேறு விடயங்கள் இந்த நடமாடும் சேவையில் இடம் பெற்றது.


               Photos by: Krishnapillai Sutharsan