நவராத்திரி விரத ஆரம்பம்

posted Sep 25, 2014, 6:37 PM by Veeramunai Com   [ updated Sep 25, 2014, 6:40 PM ]
இந்துக்களால் அனுஷ்டிக்கப்படுகின்ற மிக முக்கிய விரதங்களின் ஒன்றான நவராத்திரி விரதம் நேற்று (24/09/2014) ஆரம்பமாகியுள்ளது. புரட்டாதி மாதம் பிரதமை திதியில் ஆரம்பமாகும் இந்த விரதம் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. நவராத்திரி விரதத்தின் முதல் மூன்று நாட்களும், துர்க்கா தேவியை குறித்தும் அடுத்த மூன்று நாட்களும் லக்ஷ்மி தேவியை குறித்தும் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த விரதத்தின் கடைசி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாட்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். நவராத்திரி விதரம் நிறைவு பெற்றதும் மறுநாள் விஜய தசமி திருநாள் கொண்டாடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் நவராத்திரி விரதத்தை முன்னிட்டு அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் கொலு வைக்கப்பட்டு விசேட பூசைகள் நடைபெற்றுவருவதுடன் திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் வஜனை மற்றும் பேச்சுக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.