வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய நிர்வாக சபையினரின் ஏற்பாட்டில் வீரமுனை அறநெறிப் பாடசாலையினர் நடாத்திய நவராத்திரி விழா சிறப்பு நிகழ்வு 05.10.2013 ஆம் திகதி தொடக்கம் 14.10.2013 ஆம் திகதி வரை ஆலயத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் முதன் முறையாக கொலுவைத்தல், பஜனை, அறநெறி மாணவர்களின் பேச்சுக்கள், அறநெறி ஆசிரியர்களின் சிறப்பு சொற்பொழிவுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கிடையே மாலை கோர்த்தல், கோலம் போடுதல் போட்டி என்பன நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கபட்டது.மாலை கோர்த்தல், கோலம் போடுதல் போன்ற போட்டிகளுக்கான பரிசில்களை அண்மைக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு சமூக சேவைகளில் அக்கறைகாட்டிவரும் நண்பர்கள் நலநோம்பு அமைப்பினர் வழங்கி வைத்தனர். |
நிகழ்வுகள் >