சக்தி விரதங்களுள் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று ( 08.10.2010) முதல் அனுஸ்டிக்கப்படுகின்றது. இவ் விழா உலகெங்கிலுமுள்ள இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. முப்பெரும் தேவியராகிய துர்க்கா, இலஷ்மி, சரஸ்வதி, தேவியரை பூஜித்து ஒன்பது இரவுகள் அனுஸ்ட்டிக்கப்படுகின்றது. இதில் முதல் மூன்று நாட்களும் துர்கைக்கும் அடுத்த மூன்று நாட்களும் லட்சுமிக்கும் இறுதி மூன்று நாட்களும் சரஸ்வதிக்கும் சிறப்பு பூசைகள் செய்து வழிபடுவர். இறுதி நாளான விஜய தசமி அன்று ஏடு தொடுக்குதல், நற் காரியற்களை ஆரம்பித்தல் என்பன இடம் பெறும். பாடசாலை மாணவர்களுக்கு வாணி விழா என்றாலே கொண்டாட்டம் தான். நவராத்திரி விழாக் காலத்தை மாணவர்கள் பெரிதும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். மாணவர்கள் ஒன்பது நாளும் விரதம் இருந்து வழிபடுவது வழக்கமாகும். பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் வகுப்புக்களின் அடிப்படையில் இந்நாட்களை பூஜைக்காக ஒதுக்கிக் கொடுப்பது வழக்கமாகும். இம் முறையும் வழமை போன்று நவராத்திரி விரதத்தை முன்னிட்டு வீரமுனை ஸ்ரீ சிந்தாயத்திரைப் ஆலயத்தில் சிறப்பு பூசைகள் மாலை வேளையில் இடம் பெறுகின்றன. |
நிகழ்வுகள் >