சது/ வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுடன் சந்தித்து சில முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் இன்று (07/03/2015) காலை 9.00 மணிக்கு பாடசாலை கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் S.மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இறைவணக்கத்தினை தொடர்ந்து உரையாற்றிய தலைவர் கூட்டம் கூட்டப்பட்டதன் நோக்கம் பற்றியும் கடந்த காலங்களில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றி விரிவாக எடுத்து கூறினார். அடுத்து உரையாற்றிய செயலாளர் N.பிரதாப் அவர்கள், பாடசாலையின் பின்னடைவு பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் எடுத்துக்காட்டியதோடு புதிய அதிபர் ஒருவரினை வலயக்கல்வி அலுவலகத்தினூடாக பெற்றுக்கொள்வதற்கான ஆணையை பொதுமக்களிடம் பெற்றுக்கொண்ட அவர் பெற்றோர் விழிப்புடன் இருக்கவேண்டியதன் அவசியம் பற்றியும் தெளிவாக விளக்கினார். தொடர்ந்து பொருளாளர் R.தயாபரன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட விளக்கங்களில் முக்கியமாக மாணவர்களின் மதிய உணவுப்பிரச்சினை உள்ளடங்கியிருந்தது. அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் கருத்துரைத்த பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் S.திருச்செல்வம் அவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் இடம்பெற்ற செயற்பாடுகள், கையாண்ட விதம் பற்றியும் விளக்கினார். பொதுமக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அவை கேட்டறியப்பட்டதோடு அவர்களின் கருத்துக்களுக்கு அமைய சில தீர்மானங்கள் எட்டப்பட்டன. |
நிகழ்வுகள் >