வீரமுனையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலிப்பிள்ளை
கோபி அவர்கள் வீரமுனை ஆர்.கே.எம் வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகை
பாடசாலை உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கினார். இப் பொருட்கள் வழங்கும்
நிகழ்வானது இன்று (04.03.2011) காலை 10.00 மணியளவில் வீரமுனை ஆர்.கே.எம்
வித்தியாலய கேட்போர் கூடத்தில் வித்தியாலய அதிபர் S.சந்திரமோகன்
தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வறுமையான மற்றும் பெற்றோரை இழந்த
மாணவர்களுக்கு சீருடை, பாதணிகள் வழங்கப்பட்டதோடு பாடசாலைக்கு நீர்வடிகட்டி
ஒன்றும் வழங்கப்பட்டது. |
நிகழ்வுகள் >