பிறக்க இருக்கும் வருடப்பிறப்பை முன்னிட்டு வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியின் கடந்த 03.04.2015 கழக மைதானத்தில் ஆரம்பமானது. காயத்திரி, சுப்பர் கிங்க்ஸ், யங் ஸ்டார், அசத்தல், விஷ்ணு, எவரெஸ்ட் என ஐந்து அணிகள் பங்கு பற்றிய சுற்றுப்போட்டியில், இறுதிச் சுற்றுப்போட்டிக்கு காயத்திரி, சுப்பர் கிங்க்ஸ் அணிகள் தெரிவாகின. நேற்று (11.04.2015) இடம்பெற்ற இறுதிச் சுற்றுப்போட்டியில் காயத்திரி அணியினர் வெற்றி பெற்றனர். இதற்கான வெற்றிக்கிண்ணங்கள் நடைபெற இருக்கும் சித்திரைவருட மாபெரும் விளையாட்டு விழாவில் வழங்கப்படும். |
நிகழ்வுகள் >