ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேக நிகழ்வுகள்

posted Jun 17, 2014, 4:04 AM by Veeramunai Com   [ updated Jun 17, 2014, 4:05 AM ]
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் மஹா சங்காபிஷேகம் இன்று (17.06.2014) செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சையாக இடம்பெற்றது. மகா மண்டபத்தில் 1008 எட்டு சங்குகள் அடுக்கப்பட்டு கும்பங்கள் வைக்கப்பட்டு அவற்றுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டதுடன் விசேட யாக பூசையும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பூசைசெய்யப்பட்ட பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய சீர்பாததேவியினால் பிரதிஸ்டை செய்யப்பட்ட விநாயகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சங்காபிஷேகம் செய்யப்பட்டதுடன் விநாயகப்பெருமான் உள் வீதி வலம் வந்து அடியார்களுக்கு காட்சி வழங்கினார். மேலும் இந்நிகழ்வினைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வொன்றும் இடம்பெற்றது.