புலமைச் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா

posted Oct 10, 2012, 10:37 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 10, 2012, 10:39 AM ]
கமு/ சது/ வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை கௌரவிக்கும் விழா இன்று (10/10/2012) திரு.S.சந்திரமோகன் (வித்தியாலய முதல்வர்) தலைமையில் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.  இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக ஜனாப் M.K.M.மன்சூர் (வலயக்கல்விப் பணிப்பாளர் - சம்மாந்துறை) , கௌரவ அதிதிகளாக திரு.T.கலையரசன் (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்) மற்றும்  திரு.M.இராஜேஸ்வரன் (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்) , திரு.V.T.சகாதேவராஜா (தலைவர் இ.த.ஆ.ச) , பெற்றோர்கள் , பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் போது மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதோடு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.                    Photos by: Krishnapillai Sutharsan