சது / வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலய சாதனையாளர் விழாவானது 10.12.2010 அன்று மு.ப.9.00 மணிக்கு திரு. S.சந்திரமோகன் அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கௌரவ திரு. S.புஸ்பராஜா (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்) அவர்களும், கௌரவ அதிதியாக திரு.P.பிரசாந்தன் (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்) அவர்களும், வித்தியா அதிதியாக கௌரவ ஜனாப்.M.K.M.மன்சூர் (வலயக் கல்விப் பணிப்பாளர், சம்மாந்துறை) அவர்களும், மேலும் பல சிறப்பு அதிதிகளும் கலந்து கொண்டனர். இதன் போது 2008,2009,2010 ஆண்டுகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கும், 2009 இல் க.பொ.த.(சா.த.) பரீட்சையில் முதன்மைச் சித்தி எய்திய மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. |
நிகழ்வுகள் >