ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பட்டயம் அறிவிக்கும் நிகழ்வு

posted Jun 5, 2014, 10:02 AM by Veeramunai Com   [ updated Jun 5, 2014, 10:57 AM ]
வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு எமது முன்னோர்கள் பின்பற்றி வந்த மரபான பட்டயம் அறிவிக்கும் நிகழ்வு 02.06.2014 அன்று மாலை 7.00 மணிக்கு இடம்பெற்றது. எமது முன்னோர்கள் கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் இடம்பெறும் வேளையில் கிராமத்தில் சில விடயங்களை (மா இடித்தல், வெள்ளை கட்டுதல், ,தீட்டு உடையவர்களை ஆலயத்துக்கு அண்மையிலிருந்து விலக்கி வைத்தல், மஞ்சள் இடித்தல், பெண்கள் தலை விரிகோலமாக செல்லல், பொரித்தல், மங்களகரமான நிகழ்வுகளை வீடுகளில் நடத்துதல்) செய்யாமையினை மரபாக கொண்டிருந்தனர். அவ் விடயங்களை உற்சவம் இடம்பெறுவதற்கு முன்னர் கிராமம் முழுவதும் சென்று மக்களுக்கு அறிவிப்பர். எனவே தான் வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையினரும் இந்து சமய மரபினை பேணுவோம் என்பதற்கிணங்க எமது முன்னோர்கள் கையாண்ட ஆலய உற்சவம் இடம்பெறும் வேளையில் செய்யத்தகாதவை இவையென மாட்டு வண்டியினூடாக கிராமம் முழுவதும் சென்று அறிவித்தனர்.Comments