வீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ திருக்கதவு திறத்தல் நிகழ்வு

posted Jun 5, 2014, 10:38 AM by Veeramunai Com   [ updated Jun 5, 2014, 10:56 AM ]
வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் திருக்கதவு திறக்கும் நிகழ்வு இன்று 05.06.2014 இரவு இடம்பெற்றது. வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணகி அம்மன் விக்கிரகமானது ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சடங்குகளுடன் திருக்கதவு திறக்கும் நிகழ்வு இனிதே இடம்பெற்றது. இதேவேளை கண்ணகி அம்மன் ஆலயமானது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோடு தொடர்ந்து 8 தினங்களுக்கு சடங்குகள் இடம்பெற்று 12.06.2014 அன்று காலை குளிர்த்தி பாடுதலுடன் உற்சவம் இனிதே நிறைவுபெறும்.