ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ பாற்குட பவனி

posted Jun 26, 2012, 12:45 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 2, 2012, 10:16 AM ]
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 9ஆம் நாளாகிய இன்று (25/06/2012) தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மு.ப 9.30 மணியளவில் பாட்குடபவனியொன்று இடம்பெற்றது. வீரமுனை ஆண்டிசந்தி ஸ்ரீ முத்துலிங்க பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குடம் எடுத்து வரப்பட்டு சீர்பாததேவி கண்டெடுத்த ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது. முன்னே மேள தாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது பூசகர் பாற்குடம் எடுத்துவர அதன் பின்னே சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தகாநாயக்க மற்றும் பெண்கள் பாற்குடம் எடுத்து வந்தனர். மேலும் இம்முறை 150 இற்கும் அதிகளவான பெண்கள் பாற்குடம் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.Comments