ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ தேர்த்திருவிழா

posted Jun 26, 2012, 12:55 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 2, 2012, 10:19 AM ]
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று (25/06/2012) வெகுவிமர்சையாக இடம்பெற்றது.இந்த தேர்த்திருவிழாவில் சுமார் 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அலங்கரிக்கப்பட்ட யானையின் பவனியுடன் வசந்தமண்டபத்தில் இடம்பெற்ற விசேடபூசையின் பின்னர் சுவாமியும் தேர் முட்டியும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தேர் உற்சவம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. பெண்கள் ஒரு புறமாகவும் ஆண்கள் ஒரு புறமாகவும் தேர் வடம் இழுத்துவரும் காட்சி அனைவரையும் மெய்சிலிக்கவைத்தது. இதன் போதான காட்சிகள்.


                    Photos By:  Santhiramohan Shanjeev
Comments