வரலாற்று சிறப்புமிக்க வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் இன்று (26/06/2014) புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை 8.00 மணிக்கு துவஜாரோகண கிரியைகள் ஆரம்பமாகி முற்பகல் 10..30 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. 10 தினங்கள் இடம்பெறும் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உள் வீதி, வெளி வீதி திரு உலா இடம்பெறும்.எதிர்வரும் 2 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு வேட்டைத் திருவிழா இடம்பெறவுள்ளதுடன் இரவு அலங்கரிக்கப்பட்ட சப்புரத்தில் சுவாமி திருஉலா இடம்பெறும். அதனைத்தொடர்ந்து 3ஆம் திகதி வியாழக்கிழமை காலை பாற்குட பவனியும் பிற்பகல் 4.00 மணிக்கு மிகவும் சிறப்பாக விளங்கும் தேர்த்திருவிழா இடம்பெறுவதோடு மறுதினம் வெள்ளிக்கிழமை காலை தீர்த்தோற்சவம் இடம்பெறும். |
நிகழ்வுகள் >