கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்றதும் வரலாற்றுப் புகழ்வாய்ததுமான வீரமுனை ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலய ஆனி உத்தர மகோற்சவப் பெருநாளின் ஒன்பதாம் நாளன்று (06.07.2011) பி.ப 05.00 மணியளவில் தேரோட்ட நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது. இம் முறை புதிதாக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஐந்து முகக் கணபதி; சித்திரத் தேரில் ஏறி அடியார்களுக்கு அருள்பாலித்தமை சிறப்பம்சமாகும். தேரோட்ட நிகழ்வின் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் அண்மைக் கிராமங்கலிருந்து அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டமையாகும். தேரோட்ட நிகழ்வு எமது இணையத்தளத்தின் ஊடாக நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. |
நிகழ்வுகள் >