ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்தோற்சவம் மற்றும் கொடியிறக்கம்

posted Jul 4, 2014, 10:14 PM by Veeramunai Com   [ updated Jul 5, 2014, 2:11 AM ]
வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ஆம் நாளாகிய நேற்று (04/07/2014) வெள்ளிக்கிழமை தீர்தோற்சவம் மற்றும் கொடியிறக்கம் இடம்பெற்றது. விசேட கொடித்தம்ப பூசை, வசந்த மண்டப பூசையினைத் தொடர்ந்து மஞ்சள் இடிக்கும் நிகழ்வு இடம்பெற்று யானையிலே அங்குசம் எடுத்துச்செல்லப்பட்டு பக்தர்கள் சூழ தீர்தோற்சவம் இடம்பெற்றது. அன்றய தினம் பிற்பகல் 7.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பொன்னூஞ்சலில் கணபதியை வைத்து பொன்னூஞ்சல்பா பாடிய பின் அவரோஹனம் என்று அழைக்கப்படும் கொடியிறக்கம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சண்டேஸ்வரர் பூசை மற்றும் ஆச்சாரியார் உற்சவத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.


மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்


Comments