ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 5ஆம் நாள் நிகழ்வுகள்

posted Jun 29, 2014, 7:00 PM by Veeramunai Com   [ updated Jun 29, 2014, 7:01 PM ]
அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 5ஆம் நாளாகிய நேற்று (29/06/2014) ஞாயிற்றுக்கிழமை பகல் வழமைபோன்று கொடித்தம்ப பூசை, வசந்தமண்டப பூசைகள், சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உள் வீதி, வெளி வீதி திரு உலா வருத்தல் இடம்பெற்றன. 

மேலும் இரவு மட்டக்களப்பு இராஜயோக பிரம குமாரிகள் நிலையத்தினரின் சொற்பொழிவும் மற்றும் திருஞானசம்பந்தர் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பேச்சுக்களும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதோடு விசேட பூசையாக சக்தி முத்தி பாவன உற்சவம் எனப்படும் சண்டேஸ்வரர் பூசை இடம்பெற்றது.